Ads Area

பட்டாதாரி மாணவர்களுக்கான கிராஅத் போட்டி, வெற்றியீட்டுவோருக்கு பணப் பரிசு (விபரம் உள்ளே)

இப் புனித ரமாழான் மாதத்தில், அல் - குர்ஆனை அழகாக ஓதுவதில் இளங்களை பட்டதாரி மாணவர்களிடையே உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் அமைப்பானது அகில இலங்கை ஐம்இயதுல் உலமாவுடன் இணைந்து 'முஸாபஹத்துல் புர்கான் - இளங்களை பட்டாதாரி மாணவர்களுக்கான கிராஅத் போட்டி' இனை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

நீங்கள் இறை வேதத்தின் வசனங்களை ஓதுவதில் திறமையானவராயின் உங்கள் திறமைக்கான சிறந்த வாய்ப்பாக இது அமைகிறது. இதில் நீங்களும் பங்கேற்று பெறுமதியான பணப் பரிசில்களை வெல்லுங்கள்.

இளங்களை - ஆண், இளங்களை - பெண், இளங்களை - ஆண் ஹாபிழ் ரூ உலமா, இளங்களை - பெண் ஹாபிழ் ரூ உலமா ஆகிய நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் நடாத்தப்படும். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாம்,இரண்டாம், மூன்றாம்  இடத்தை பெறுபவருக்கு 15,000, 10,000, 5,000 என பெறுமதியான பணப் பரிசில்களை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

நீங்களும் வெற்றியாளராக வேண்டுமா? உங்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோ இனை ளடயரஅளயஅநனயைளூபஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது ஆண்கள்  0771510093 - 0756373874, பெண்கள் 0774703779 - 0767190902 என்ற இலக்கத்திற்கு உங்களது முழுப்பெயர், பீடம், பல்கலைக்கழகம், கல்வி ஆண்டு போன்ற விபரங்களோடு போட்டி முடிவுத் திகதியான 20.05.2020 இற்கு முன்னதாக எமக்கு அனுப்பி வையுங்கள். வீடியோ இணைப்புடன் கட்டாயம் உமது பல்கலைக்கழக அடையாள அட்டையினுடைய புகைப்படம் அனுப்பப்படல் வேண்டும்.

குர்ஆனின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் நீங்கள் வசனங்களை தேர்ந்தெடுக்க முடியும். வீடியோவானது இரண்டு நிமிடங்களை விட அதிகரிக்காததாக அமைய வேண்டும். அதிகரிக்கும் பட்சத்தில் புள்ளிகள் குறைக்கப்படும். மேலும், ஹாபிழ் ரூ உலமா பிரிவில் உள்ளடங்கும் மாணவர்கள் குர்ஆனை பார்த்து ஓத முடியாது. மனனம் செய்த குர்ஆன் வசனங்களையே ஓத வேண்டும்.

விதிமுறைகளை மீறு போட்டியாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்படலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

மேலதிக விபரங்களுக்கு :

ஆண்கள்  - 0771510093 - 0756373874
பெண்கள் - 0774703779 - 0767190902



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe