சவுதியில் கொரோனா எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது! கத்தாரின் 30 ஆயிரத்தை தாண்டியது.
சவூதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (16.05.2020) 2,840 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனோடு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 52,016ஆக உயர்ந்துள்ளதாக சவுதியின் சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுவரை சவூதியில் 302 பேர் கொரோனா காரணமாக மரணித்துள்ளதோடு 23,666 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதே வேளை கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 30972 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (16.05.2020) மட்டும் புதியதாக 1547 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 152704 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 30972 பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி - கத்தார் தமிழ்