ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இதுபற்றி பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிக்கப்பள்ளி போலீசார் அனந்தபுரத்தில் உள்ள கியா கார் தொழிற்சாலை அருகே பேருந்தை மடக்கி நிறுத்தினர். பேருந்தை கடத்தி சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.