Ads Area

சவூதியிலிருந்து தமிழகத்திற்குச் செல்லும் 2 தனி விமானங்கள் – பயண தேதி அறிவிக்கப்பட்டது..!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் சட்டமன்ற சங்கநாதம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.A.M.முகமது அபுபக்கர் அவர்களின் ஆலோசனைப்படி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கொறடா இராமநாதபுரம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கா.நவாஸ்கனி அவர்களின் பேருதவியுடன் சவூதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு இரண்டு தனி விமானங்கள் (Chartered Flights) இயக்கப்பட இருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தனி விமானத்தின் பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரியாத் மற்றும் ஜித்தாவிலிருந்து கிளம்பும் இந்த இரண்டு தனி விமானங்கள் திருச்சிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி (10/07/2020) பயணிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe