கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான விசேட ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை கைவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கூறினார்.