Ads Area

தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பேரீச்சம்பழம் தித்திக்கும் பழம் மட்டும் கிடையாது. இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 3.5 அவுன்ஸ் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 20% பொட்டாசியம் அளவு பூர்த்தி செய்யப்படுகிறது. 7 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம் மற்றும் பல ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் காணப்படுகின்றன. இதைத் தவிர காப்பர், மாங்கனீசு, விட்டமின் பி6, மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன.

பேரிட்சை

ப்ரஷ்ஷான பேரீச்சம் பழம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் காணப்படும். உலர்ந்த பேரீச்சம் பழம் தங்க பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. உலகளவில் கிட்டத்தட்ட 3000 க்கும் மேற்பட்ட பேரீச்சம் வகைகள் காணப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் 2 பேரீச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கப் பெறும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கிறது என இப்பொழுது பார்க்கலாம்.

​​சீரண சக்தியை மேம்படுத்துகிறது

பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுவதால் செரிமானத்தின் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இது பெருங்குடல் வழியாக கழிவுகளை தள்ள பயன்படுகிறது. இதை நீங்கள் உணவில் சேர்க்கும் போது உங்க சீரண சக்தி மேம்படுகிறது. உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லை இருந்தால் நாள்தோறும் இரண்டு பேரீச்சம் பழம் வீதம் எடுத்து வரலாம்.

​​உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது

பேரீச்சம் பழம் நம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. ஆனால் நம் உடலுக்கு தேவையான நீடித்த ஆற்றலை கொடுக்கும். மேலும் இதன் கிளைசெமிக் குறியீட்டெண் மிகவும் குறைவு. இதனால் இரத்த சர்க்கரையை உயர்த்தும் என்று பயப்பட தேவையில்லை. நாள்தோறும் ஆற்றலை இழக்காமல் நீடித்த ஆற்றலை கொடுக்கும்.

நோய்களை தடுக்கக் கூடியது

பேரீச்சம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அத்திப்பழம் மற்றும் பிளம்ஸ் போன்றவற்றில் காணப்படுவதைப் போன்று பேரீச்சம் பழத்திலும் 3 விதமான ஆக்ஸினேற்றிகள் காணப்படுகின்றன.

​​ஃப்ளவனாய்டுகள்

இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இது உடம்பில் உள்ள வீக்கத்தைக் குறைக்க பயன்படுகிறது. நீரிழிவு நோய், அல்சைமர் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

​​கரோட்டினாய்டுகள்

இந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. கண் புரை மற்றும் மாகுலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

​பினோலிக் அமிலம்

இது இதய நோய் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும். எனவே பேரீச்சம் பழம் உங்களை நோய்களில் இருந்து காக்கிறது.

​​வயது தொடர்பான மனநிலை பிரச்சனைகள்

நம் மூளை ஆரோக்கியமாக செயல்பட சரியான ஊட்டச்சத்துக்களை பெறுவது அவசியம். அல்சைமர் போன்ற மறதி நோய்களை தடுக்க பேரீச்சம் பழம் உதவுகிறது. மூளையில் அமிலாய்ட் பீட்டா புரோட்டீன் பிளேக்குகள் உருவாகுவதைத் தடுக்கும் திறன் பேரீச்சம் பழத்திற்கு உள்ளது.

இந்த பிளேக்குகள் உருவாகும்போது, அவை மூளை செல்கள் இடையேயான தகவல் தொடர்புக்கு இடையூறு விளைவிக்கின்றன மற்றும் செல்கள் வேகமான வேகத்தில் இறக்கின்றன. பிற விலங்கு ஆய்வுகளின் படி இந்த பேரீச்சம் பழம் கவலை தொடர்பான நடத்தைகளை குறைக்கிறது.

​​வெள்ளை சர்க்கரை குறைவு

நாம் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வது நம் உடல் பருமனுக்கு வழி வகுத்துவிடும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் பல உணவுகளில் பல தரப்பட்ட பேர்களில் காணப்படுகிறது. எனவே சர்க்கரை அளவை குறைக்க விரும்புபவர்கள் ஆரோக்கியமான வீட்டில் சமைக்கும் உணவுகளையே எடுத்துக் கொள்ளுங்கள்.

எனவே உங்க நாக்கு சர்க்கரைக்கு அடிமையாகும் பட்சத்தில் சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள். அதே மாதிரி நிறைய ரெசிபிகளில் கூட நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் பழம் சேர்த்து சமைத்து வரலாம். பேரீச்சம் பழத்தை ஒரு மிக்ஸி சாரில் போட்டு தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். எனவே நீங்கள் பேக்கிங் உணவுகள் தயாரிக்கும் போது சர்க்கரைக்கு பதிலாக 1:1 என்ற வீதத்தில் இந்த பேரீச்சம் பழம் பேஸ்ட்டை பயன்படுத்தி வாருங்கள். இதில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.

​​ஒரு நாளைக்கு 2 பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தை ஒரு நாளைக்கு 2 என எடுத்து வாருங்கள். ஏனெனில் இதில் கலோரிகள் அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு இரண்டு போதுமானது. இதன் மூலம் ஏராளமான நன்மைகளை நீங்கள் பெற முடியும். அதே மாதிரி உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக பேரீச்சம் பழம் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நாள்தோறும் நீடித்த நிலையான ஆற்றலை கொடுத்து உங்களை சுறுசுறுப்பாக வைக்கும்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe