Ads Area

கல்முனை பிரதேச இளைஞர்- யுவதிகளுக்கு தேர்தல் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நல்லிணக்க செயலமர்வு.

(எம்.என் .எம்.அப்ராஸ்)

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேசத்தில் உள்ள இளைஞசர் யுவதிகளுக்கு தேர்தல் காலத்தில் பொது மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நல்லிணக்கம் தொடர்பான செயலமர்வு கல்முனை இக்பால் சன சமூக நிலைய மண்டபத்தில் (04) சனியன்று இடம்பெற்றது.

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் நிர்வாக உறுப்பினர் எஸ்.எல் .அஸீஸ் ஒருங்கினைப்பில்,உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்கத்தின் அம்பாரை மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ் .ஜெலீல் தலைமையில் இச் செய்லமர்வு இடம்பெற்றது 

இதன் போது வளவாளராக கல்முனை பிராந்திய மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் இஸ்சதீன் லத்தீப் ,மற்றும் சமாதானமும் சமூக பணியும் அமைப்பின் இணைப்பாளர் டீ .ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதன் போது.

தேர்தல் காலத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் அவசியம் பற்றியும் நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன் நல்லிணக்கத்தை பாதுகாக்க   இளைஞசர் யுவதிகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இச் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe