Ads Area

223 உறுப்பினர்களுடன் மட்டுமே ஆரம்பமான பாராளுமன்றம்; மிகுதி 2 உறுப்பினர்கள்..??


சம்மாந்துறை அன்சார்.


தேர்தலுக்குப் பிறகு இன்று கூடிய 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் அபே ஜன பலவேகய கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் எவரும் கலந்து கொள்ளாமையினால் 223 உறுப்பினர்களுடன் 9வது பாராளுமன்றம் ஆரம்பமானது.

இலங்கையின் பழம்பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி இம்முறை தேர்தலில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவியிருந்தது இதனால் அக் கட்சிக்கு எந்தவொரு ஆசனங்களும் கிடைக்கவில்லை ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனமே கிடைக்கப் பெற்றது. அக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் விடையத்திலும் தற்போது இழுபறி நிலை இடம் பெறுவதனால் ஐக்கிய தேசிய கட்சியின் எந்தவித உறுப்பினர் இன்றிய  பாராளுமன்றமாக இன்றைய 9வது பாராளுமன்றம் அமைந்தது.

அதே போல் அபே ஜன பலவேகய கட்சிக்கும் இம்முறை ஒரே ஒரு தேசியபட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது இக் கட்சிக்குல்லும் தேசியபட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையே இருந்து வருகின்றது, தேசியப்பட்டியல் ஆசன விடையத்தில் ஞானசார தேரர் மற்றும் ரத்னதேரர் ஆகியோருக்கிடையில் பாரிய பிணக்கு நிலையிருந்து வருகின்றது.

இவ்விரு கட்சிகளின் உறுப்பினர்களும் இன்மையில் இன்றைய 9வது பாராளுமன்ற ஒன்று கூடல் 223 உறுப்பினர்களுடன் ஆரம்பமானது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe