Ads Area

துருக்கி நாட்டின் ஜனாதிபதியின் மனைவியை சந்தித்த அமிர்கான்; வலுக்கும் எதிர்ப்பு.

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கடந்த வாரம் தனது படப்பிடிப்பு குழுவினருடன் துருக்கி சென்றார். அங்கு தான் தயாரித்து, நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படப்பிடிப்பை நடத்துகிறார். இதற்காக அனுமதி வழங்கிய துருக்கி அதிபரை சந்திக்க முடிவு செய்தார். அதற்கு நேரம் ஒதுக்கி தராததால் அவரது மனைவி எமினி எர்டோகனை சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பை தொடர்ந்து துருக்கி அதிபரின் மனைவி "புகழ்பெற்ற இந்திய நடிகர் ஆமீர்கானை சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று தனது டுவிட்டரில் பதவிட்டிருக்கிறார். இந்த நிலையில் துருக்கி அதிபர் மனைவியை ஆமீர்கான் சந்தித்தற்கு  இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

காரணம் துருக்கி, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு. பல விஷயங்களில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்த நாடு அப்படிப்பட்ட நாட்டின் அதிபரின் மனைவியை எப்படி சந்திக்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe