Ads Area

இலங்கையிலிருந்து கத்தாருக்கு செல்ல கொரோனா PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்.

கொரோனா தாக்கம் குறைந்து விமானச் சேவைகள் தங்களது பணிகளை வழமைக்குத் திருப்பிய பின்னர், உலகின் முன்னணி விமானச் சேவையான கத்தார் ஏர்வெய்ஸ் மூலம் பயணிக்க விரும்பும் பயணிகள் கொரோனா  PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க வேண்டியவர்கள் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பதாக கத்தார் ஏர்வெய்ஸ் தனது உத்தியோக பூர்வ இணையத்தளம் ஊடாக தெரிவித்துள்ளது. மேலும் பங்களாதேஷ், ஈரான், ஈராக், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தியா, நோபாளம், நைஜீரியா, மற்றும்  ரஷ்யா  போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொரோனா தொற்று சம்மந்தமான  PCR பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் பெற்றிருப்பது அவசியமாகும்.  அந்த சான்றிதழானது பயணிக்க 72 மணித்தியாலத்தினும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையிலிருந்து கத்தாருக்கு பயணிக்க விரும்புவர்கள் பின்வரும் வைத்தியசாலைகளில் தங்களது பரிசோதனை செய்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Durdans Hospital
Nawaloka Hospital
Lanka Hospital
Asiria Surgical Hospital


Thanks - Qatar Tamil.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe