Ads Area

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டடால் 600 தினார் அபராதம்.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டடால் 600 தினார் அபராதம். 

குவைத்தில் சட்டத்தை மீறி தங்கியிருப்பவர்களை கைது செய்து அபராதம் விதிக்கப்படும், மேலும் நாடு கடத்தபடுவார்கள் ... ஒரு நபருக்கு அதிகபட்சம் KD 600 அபராதம் விதிக்கப்படும்... குவைத்தில் சட்டத்தை மீறி 1,20,000 பேர் தங்கியுள்ளனர்.


குவைத்தில் அக்காமா இல்லாமல் இருந்த வெளிநாட்டினர், அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற குவைத் அரசாங்கம் வழங்கிய பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தாமல், 120,000 வெளிநாட்டினர் குடியிருப்பு சட்டத்தை மீறி (அக்காமா இல்லாமல்) குவைத்தில் நாட்டில் இருப்பதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அபராதம் செலுத்தும்படி செய்த பின்னர், சட்டத்தை மீறியவர்களை கைது செய்து நாடு கடத்த ஒரு திட்டத்தை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

குவைத்தில் சட்டத்தை மீறி தங்கியிருந்ததற்காக ஒரு நபருக்கு அதிகபட்சமாக 600 தினார்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்காமா இல்லாமல் கைது செய்யப்படும் நபர்களை நாடு கடத்த, சம்பந்தப்பட்ட ஸ்பான்சர்கள் விமான கட்டண டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


சட்டத்தை மீறியவர்களில் பெரும்பான்மையானவர்கள் விசா வர்த்தகர்களால் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் என்று நம்பப்படுகிறது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe