Ads Area

தர்மச்சக்கரம் பதித்த ஆடை அணிந்த விவகார வழக்கு முடிவுக்கு வந்தது : மசாஹிமா விடுதலை.

ஹசலக பொலிசாரால் தர்ம சக்கரத்தை கொண்ட ஆடையை அணிந்து புத்த மதத்துக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்தி இரு சமூகங்களுக்கிடையிலே இன முறுகளை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில்  அப்பாவி முஸ்லிம் ( சகோதரி மசாஹிமா)  கைது செய்யப்பட்டமை நீங்கள் அறிந்த விடயமே.

தற்போது மசாஹிமாவுக்கெதிரான தர்மச்சக்கர வழக்கு இன்று 17.08.2020ம் திகதி திங்கட்கிழமை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி இவ்வழக்கை கொண்டு நடாத்த முடியாததால் மசாஹிமா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி சறூக் மற்றும் , சட்டத்தரணி நுஸ்ரா சறூக் (கணவன்-மனைவி) மன்றில் சகோதரி மசாஹினா சார்பில் வாதாடியிருந்தனர்.

மசாஹிமாவுக்காக வாதாடிய சட்டத்தரணி சறுாக் அவர்கள் பாதிக்கப்பட்ட அவலைப் பெண்ணுக்கான நஷ்டயீட்டை எவ்விதமான கட்டணங்களுமின்றி அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மூலம் பெற்றுக்கொடுக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe