அமீரகத்திலிருந்து இலங்கை திரும்ப 19,000 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதில், விமான டிக்கெட் மற்றும் கட்டண தனிமைப்படுத்தலுக்குத் தேவையான பணம் செலுத்த முடியாதவர்களுக்கு துணைத் தூதரகமே பொருளாதார ரீதியில் உதவி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிறப்பு விமான சேவையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்வேஸ் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.