மாத்தளை மாவட்டதின் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இனிப்புப் பாக்கு வியாபாரம் குறித்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
கலேவல பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு சிறிய பொதிகளில் விற்கப்படுகின்ற நிறமேற்றப்பட்ட இந்தப் பாக்கு வகையினை பல பாடசாலை மாணவர்களும் உட்கொள்வதற்கு பழகியிருப்பதாக மாத்தளைப் பொலிஸ் நிலையத்திற்கு அறியக் கிடைத்ததைத் தொடர்ந்து இது குறித்து பொலீசார் ஆரயத் துவங்கினர்.
அதன் பின்னர் சாதாரண உடையணிந்த பொலிசார் நகரத்தில் எல்லா இடங்களுக்கும் சென்று இனிப்புப் பாக்கு குறித்த தடயங்களை தேட ஆரம்பித்தனர்.
நாட்கள் செல்லும் போது மாத்தளை நகரத்தில் மாத்திம் நாள் ஒன்றுக்கு 5000 பைக்கற்றுகள் விற்பனையாகின்றன என்பதனை பொலிசார் கண்டறிந்தனர்.
தனக்கு; கிடைக்பெறுகின்ற இனிப்புப் பாக்குப் பொதிகளில் சுமார் 3000 தொடக்கம் 5000 பொதிகளை வாராந்தம் விற்பனை செய்வதாகச விற்பனையாளர் ஒருவர் சாட்சியமளித்திருந்தார்.
ஒரு பொதியின் கொள்வனவு விலை ரூபா 6.00 என்பதாகவும் அதனை 10 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் பாணி கலந்த இந்தப் பாக்கினை சுவைப்பதற்காக பாடசாலை மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் அதன் காரணமாக அவற்றைக் கொளற்வனவு செய்வதற்காக நாஉல நகரத்திற்கு மாணவர்கள் வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டடுள்ளார்.
https://www.facebook.com/102520121333671/posts/183842079868141/
நாஉல கல்வி வலயத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தப் பாக்குப் பாவனைக்கு அடிமையாகியிருப்பதாக தகவல்கள் ஊர்ஜிதமானதன் பின்னர் பாதுப் படையினரின் அவதானமும் இதில் செலுத்தப்பட்டது.
நாஉல பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.பீ.கே டீ ரத்னாயக்க அவர்கள் இது தொடர்பான தகவல்களை சேகரித்ததுடன் மாத்தளைப் பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் தலைமை அதிகாரி அனுருத்த பண்டாரனாயக்க அவர்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்துவிட்டு இனிப்புப் பாக்குக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான நடிவடிக்கையை ஆரம்பிக்கலானார். அடுத்ததாக நாஉல பிரதேசத்தின் சமூகப் பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரியிடம் அறிவித்து தனது நடவடிக்கைகளை இன்னும் சிறிது விரிவுபடுத்திக்கொண்டார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு சமூக பொலிஸ் பிரிவு உட்பட 46 குழுக்களுக்கு இது தொடர்பல் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிப்பதன் ஊடாக இனிப்புப் பாக்கு உட்கொள்வது உடல் நலத்துக்கு தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாக மாணவர்கள் தெளிவுபடுத்தப்பட்டனர்.
மாத்தளைப் பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் தலைமை அதிகாரி தொடர்ந்தும் கவனம் செழுத்தி தேவையான ஆலோசனைகள் வழங்குவதன் ஊடாக மாணவர்களை மீட்டெடுப்பதற்கான தனது பங்களிப்பினை வழங்கினார்.
தற்போதைய நிலையில் நாவுல பிரதேசத்தின் சில பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நாள் ஒன்றுக்கு சில பைக்கற்றுக்கள் இனிப்புப் பாக்கு உட்கொள்வதற்கு பழகியிருக்கின்றனர் என்பதாக பாடசாலை நிர்வாகிகள் பாதுகாப்புப் பிரிவிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் பின்னர் விளையாட்டு மைதானத்தில் அதிகளவாள இனிப்புப் பாக்கு வெற்றிப் பைக்கற்றுகள் காணக்கிடைத்ததன் பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அவதானம் செலுத்தினர்.
பெற்றோர்கூட இது தொடர்பில் கலவரம் அடைந்தனர். தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற மாத்தளை இனிப்புப் பாக்கு விற்பனையினை தடை செய்வவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தாம் ஈடுபடவிருப்பதாக பெற்றோர் குறிப்பிட்டனர்.
அதனையடுத்து மாத்தளை பொலிசார் குறித்த இனிப்புப் பாக்கு விற்பனையினை மெல்ல முற்றாக நிறுத்துவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நடவடிக்கை குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
“ பாக்கு, புகையிலை மற்றும் மாவா என்பன இடைநிலைப் போதைப் பொருள் வகையைச் சாருகின்றது. வெற்றிலைக்கூறு விற்பனை செய்வதற்காக பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்பதுடன் (வெற்றிலை, பாக்கு. புகையிலை என்பவற்றை ஒன்றாக விற்பதையே வெற்றிலைக் கூறு என்படும்) அதனை விட வேறு ஒன்றும் விற்க முடியாது.
இங்கு வர்ணம் ஊட்டப்பட்டு இரசாயன சேர்க்கையும் மேற்கொள்ளப்பட்டு விகாரமாக்கப்பட்ட பாக்குகளே விற்கப்படுகின்றன. இவைகளை உற்கொள்வதனால் மாணவர்கள் தமது சமநிலையை இழந்துவிடுகின்றனர். ஞாபக சக்தியில் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.
அதுமாத்திரமன்றி பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடில்லாமல் போதல் என்பனவும் நிகழ்வதை அவதானித்திருக்கின்றோம். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான அடித்தளமாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.”
சுனில் கனேமுல்ல அவர்களின் கூற்றுக்கு அமைய மாத்தளையில் அதிகளவான வியாபாரிகள் இந்த பாக்கு விற்பனையை விரும்பாதவர்களாகவே காணப்பட்டனர். அத்துடன் இந்தப் பாக்கு வகைகளை விற்பனை செய்கிற சில வியாபாரிகள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆபாத்தான ஒளடதங்கள் சட்டத்தினை அமுல் படுத்த முடியும் என்பதுடன் பதிவு செய்யப்பட்ட வியாபாரி ஒருவர் என்ற போதிலும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என்பது குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதன் பயனாக இனிப்புப் பாக்கு விற்பனையிலிருந்து தாம் தவிந்துகொள்வதாக வியாபாரிகள் குறிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று வரையில் மாத்தளைப் பகுதியில் பொலிசார் தமது அவதானத்தைச் செலுலுத்தி கண்காணிப்பு நடவடிக்ரகைகளில் ஈடுபடுகின்றனர்.
மாணவச் செல்வங்களை பாதுகாப்பதற்காக நாஉல பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக பாரியதொரு அழிவு தடுக்கப்பட்டிருக்கின்றது.
நன்றி: தினமின and Lanka Tamil Health.
Source: https://bit.ly/35Wc7YK
தமிழில்: Rafi Sharifdeen