தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீலாதுன் நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
மனித நேயம் தழைக்க நல் வழி காட்டிய நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த மீலாதுன் நபி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந் நாளில் நபிகள் நாயகம் காட்டிய போதனைகளை கடைப்பிடித்து இன்புற்று வாழ்வோம் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.