அன்பான பெற்றோர்களே ! புலமைப் பரிசில் பரீடசையில் உங்கள் பிள்ளை குறைவான புள்ளி பெற்றதால் உங்கள் பிள்ளை ஒன்றும் "திறமை அற்ற பிள்ளையுமில்லை" அதேநேரம் இப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள் எல்லாம் பிற்காலத்தில் எதையும் பெரிதாக சாத்தித்ததாக சரித்திரமும் இல்லை.
இந்தப் புலமைப் பரிசில் பரீட்சை தவறு என்று நாம் வாதாட வரவில்லை மாறாக, உங்கள் பிள்ளைகள் இந்தப் பரீட்சையில் சித்தி அடையாதிருந்தால் அவர்களை அவமானப்படுத்தியோ, குறையாக மதித்தோ அல்லது ஏன் சித்தி அடையவில்லை என்று கேட்டோ அவர்களை சித்திரவதை செய்யவேண்டாம் அது அவர்களை மனா உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும்.
ஒவ்வொரு பிள்ளையையும் அல்லாஹ் பிறவியில் ஒரு விசேட தனித்துவத்துடன் படைத்திருக்கின்றான். அதனால் இந்தப் பரீட்சையை ஒரு பிள்ளையின் திறமைக்கு ஒரு அளவுகோலாகப் பார்க்க முடியாது.
நமது பிள்ளைகளை கனடாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அனுப்பிப் படிப்பிக்க விரும்பும் நாம் அங்கே எந்தப் பரீட்சைப் பேறுபேறுகளையும் அந்தப்பிள்ளையின் பெற்றோரைத்தவிர யாருக்கும் சொல்ல மாட்டார்கள். அத்துடன் பகிரங்கமாக வெளியிடவும் மாட்டார்கள் காரணம் ஒரு பிள்ளையின் பரீட்சைப் பெறுபேறு அதன் வாழ்க்கையைத் தீர்மானிப்பதல்ல என்பதனால்தான். அதனால் இப்பரீட்சையில் சித்தியடையாத நமது சிறுவர்களை அரவணைப்போம், ஆறுதல் அளிப்போம் மிக முக்கியமாக அவர்களை மன உளைச்சலிலிருந்து பாதுகாப்போம்.
-மாஹிர் மொஹிடீன்-