புலமைப்பரிசில் பரீட்சை சம்மந்தமான பதிவேற்றங்கள் சற்றே ஓய்ந்து பேயிருக்கும் இந்நேரத்தில் இதுவும் அது தொடர்பான ஒரு பதிவே.
பொதுவாக ஒரு பாடசாலையின் வளர்ச்சிப் போக்கினை மதிப்பிட பரீட்சைப் பெறுபேறுகள் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. குறிப்பாக கா.பொ.த உ.த சித்தி ஒரு மாணவருக்கான பாடசாலை மட்டத்தில் இறுதி இலக்காக காணப்படுகிறது. இருந்தாலும் அதற்கடுத்த படியாக கா. பொ. த சா.த மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவும் ஒரு பாடசாலைக்கான மதிப்பீட்டுக் கருவிகளுள் ஒன்றாக காணப்படுகிறது.
சாதனை
இந் நிலையில்தான் அல் அர்சத் மகா வித்தியாலயம் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளுள் ஒன்றாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள ஒரு பிரதேச பாடசாலையாகவும் காணப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக இப் பாடசாலையின் பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளத்தக்க அளவு இருக்கவில்லை. இதற்கு பெற்றோரின் கவனயீனம், மாணவர்களின் அலட்சியம் என பல காரணங்கள் சொல்லப்பட்டதோடு நின்று விடாமல் அதிபர் மற்றும் ஆசிரியர்களை நோக்கியும் தாக்கியும் விமர்சனங்கள் எழுந்தது.
கடந்த வாரம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறானது பாடசாலை வரலாற்றில் ஒரு புதிய தடமாகக் காணப்படுகிறது. குறிப்பாக 190 புள்ளி என்ற சாதனையுடன் வெட்டுப்புள்ளிக்கு மேல் ஐந்து மாணவர்களும் 150 புள்ளிகளுக்கு மேல் ஒன்பது மாணவர்களும் பெற்றிருப்பது ஒரு சிறந்த இலக்கினை நோக்கிய பயணத்திற்கான ஆரம்பமாக காணப்படுகிறது.
இச் சாதனைக்குச் சொந்தக்காரர்களான மாணவர்களை மனமாற வாழ்த்துவதுடன் அச் சாதனைக்கு உத்வேகமாகவும் உறுதுனையாகவும் நின்று உழைத்த இப்பாடசாலையின் அதிபர் திரு. எம்.ஏ. றகீம் சேர் அவர்களுக்கும் வகுப்பாசிரியர்கள், பகுதித் தலைவர்கள் என அத்தனை ஆசிரியர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஈருலக வாழ்வும் இன்பமாய் இருக்க இறைவனிடம் வேண்டுகிறோம்.
அது மாத்திரமன்றி இப்பாடசலையின் மீது வலயக் கல்விப் பணப்பாள் திரு. சஹதுல் நஜீம் சேர் அவர்கள் கொண்ட விசேட பார்வையும் கண்காணிப்பும் இவ் வெற்றிக்கு இன்னும் வலுச் சேர்த்திருக்கிறது. அவருக்கும் இப் பாடசாலையின் சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் கொவிட் 19 காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலத்தில் தமது பிள்ளைகளை நல்ல முறையில் ஊக்கப்படுத்திய பெற்றோர்கள் இவ் வெற்றியின் பிரதான பங்காளிகள் அவர்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறாம்.
போதனை
பொதுவாக பெற்றோர்கள் புலமைப்பரிசில் பரீட்சையை ஒரு உச்ச கட்ட அடைவாக பார்த்து பெருமூச்சோடு நின்றுவிடாது உங்களது ஊக்கத்தையும் கரிசனையையும் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனமாக அவதானித்து மாணவர்களை கல்வியின் பால் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களின் ஒவ்வொரு பரீட்சைப் பெறுபேறுகளும் மிக முக்கியமானது அத்தனை பரிட்சைகளுக்குமான தயார் படுத்தல்களுக்கும் ஆசிரியர்களை மாத்திரம் நம்பியிராது தங்களின் முழுமையான பங்களிப்பையும் பெற்றோர்கள் வழங்க வேண்டும்.
அதிபரும் ஆசிரியர்களும், இப் பிரதேசத்தின் அத்தனை எழுச்சிகளும் ஒரு கல்வி கற்ற சமூகத்தின் ஊடாகவே நிலைபேறான முன்னேற்றத்தை காணும் என்ற அடிப்படையில் உங்களது மேலான கவனத்தை இம்மாணவர்களின் மீது செலுத்தி தொடர்ச்சியாக அனைத்து மட்டங்களிலும் எமது பாடசாலை நல்ல பெறுபேறுகளைப் பெற உங்களை மேலும் தியாகிக்க வேண்டும்.
வலயக் கல்விப் பணிப்பாளர், இப் பாடசாலையின் மீதான தங்களது கவனத்தையும் ஈர்பினையும் இன்னும் கூர்மையாக்கி இப் பாடசாலையின் முன்னேற்றத்திலும் மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க விழுமிய மேம்பாட்டிலும் ஊன்று கோலாய் இருக்க வேண்டும்.
எனது சுவாசம்
எனது பாடசாலை
பழைய மாணவர்கள் சங்கம்
அல் அர்சத் மகா வித்தியலையம்
சம்மாந்துறை.