இம்டாட் இஜாஸ்.
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியமான சூழல், சுகாத நலன்களை மேன்படுத்தும் நோக்கில் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலர் பாடசாலைகளுக்கான கொரோனா தொற்று நீக்கிப் பொருட்கள் இன்று 2020.11.26 ஆம் திகதி வியாழக் கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
உதவி பிரேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பிர் முன்னிலையில் உரிய பாடசாலை பொறுப்பாசிரியர்களுக்கு இப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், உளவளத்துணை உதவியாளர் ஏ.எச். றகீப் மற்றும் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி பாலர் பாடசாலைகளை Covid 19 நிலமைக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கின்ற போது தொற்று நீக்கி, சுத்தம் பேணும் வழி முறை ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஒரு தொகுதி தொற்று நீக்கி பொருட்கள் வசதி குறைந்த முன் பள்ளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.