நிந்தவூர் பிரதான வீதியின் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டிலிருந்து ஐம்பது (50') அடிக்கு உட்பட் தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளுக்கான பணத்தினை செலுத்தாத தனியார் நிறுவனங்களின் விளம்பர பலகைகளை அகற்றும்படி "வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்கூட்டியே அறிக்கை விடப்பட்டிருந்தும் அதனை இதுவரையிலும் அகற்றாத நிறுவனத்தின் வளம்பர பலகைகளை 19-11-2020, இன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றப்பட்டதோடு அகற்றுவதற்குரிய செலவினை நிறுவனத்திடம் அறவிடப்படுவதற்கான பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.