தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கூடாரங்களில் அல்லது வீடுகளில் 30 பேருக்கு மேற்பட்டு ஒண்டு கூடவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்ச குழு அறிவித்துள்ளது.
30 க்கு உட்பட்ட நபர்களோடு பங்கு கொள்ளும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வருவோர் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியினைக் கடைபிடிக்க வேண்டும் அதே போல் இருமல் அல்லது காய்ச்சல் போன்ற COVID-19 அறிகுறிகளைக் கொண்ட எவரும் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டங்களை யாராவது ஏற்பாடு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹம் அபராதமும் அதில் கலந்து கொள்ளும் தனிநபர்களுக்கு 15 ஆயிரம் திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும்.