உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படாத COVID-19 ஐ குணப்படுத்துவதாகக் கூறும் மருந்துகளை ஊக்குவிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை குணப்படுத்துவதாகக் கூறி உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை ஊக்குவிக்கும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பற்றவர்கள் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய மருந்துகள் ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்படாத மருந்துகளை முறையான ஆராய்ச்சி அல்லது ஒப்புதல் இல்லாமல் ஊக்குவிக்கக்கூடாது என்று ரணில் விக்ரமசிங்க கூறினார்.
அண்மையில் பல எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் அருந்திய ஆயுர்வேத மருந்தினைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த வாரம் கூடியிருந்ததை அடுத்து ரணில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
NewsWire.