(தகனத்துக்கு அனுமதி வழங்காத) கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் மரணித்த உடல்களின் கட்டாய தகனங்கள் இடைநிறுத்தப்பட்டன!
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் கட்டாய தகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் (Public Health Inspectors) தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் உரிமை கோரப்படாத சடலங்களை தகனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபைக்கு (CMC) அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரிய Colombo Gazette க்கு கருத்து தெரிவிக்கையில், பெரும்பாலும் கோவிட் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் தற்போது சவக்கிடங்கில் (mortuary) உள்ளன.
இன்று (திங்கட்கிழமை) நிலவரப்படி சவக்கிடங்கில் உரிமை கோரப்படாத ஒன்பது சடலங்கள் இருப்பதாக Colombo Gazette வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கோரியதைத் தொடர்ந்து உரிமை கோரப்படாத கோவிட் பாதிக்கப்பட்ட உடல்களின் தகனத்தை நிறுத்தி வைக்குமாறு CMC க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாலசூரிய தெரிவித்தார்.
இதன் விளைவாக, சுகாதார வல்லுநர்கள் பிரதமருக்கு கருத்து தெரிவிக்கும் வரை தகனங்களை நிறுத்துமாறு சி.எம்.சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் பாலசூரிய கூறினார்.
இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகம், கோவிட் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கவலைகளை எழுப்பி வருகிறார்கள். ஏனெனில் அது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது.
உரிமை கோரப்படாத 20 கோவிட் பாதிக்கப்பட்ட உடல்களில் இருந்து, சி.எம்.சி இதுவரை கிட்டத்தட்ட 11 உடல்களை குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்களின் அனுமதியின்றி தகனம் செய்துள்ளது, அதே நேரத்தில் உரிமை கோரப்படாத ஒன்பது உடல்கள் எஞ்சியுள்ளன, இன்னும் தகனம் செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கொங்கிரீட் கல்லறைகளை சுகாதார அமைச்சகம் முன்மொழிய உள்ளது.
சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் (DDG) டாக்டர் ஹேமந்த ஹேரத் Colombo Gazette க்கு இந்த பிரச்சினையை தீர்க்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவால் அடுத்த கூட்டத்தில் முன்மொழிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்ய கொங்கிரீட் கல்லறைகளை உருவாக்க பொருத்தமான வறண்ட நிலம் பார்க்கப்படும் என்று அவர் கூறினார்.
கட்டாயமாக தகனம் செய்யப்படும் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று தான் கருதுவதாக டாக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார்.
செய்தி மூலம் - https://colombogazette.com
தமிழில் - Dr. Ziyad Aia