Ads Area

சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டு இன்ஜினியர்களுக்கு கட்டாய தொழில்முறை சோதனை செய்ய முடிவு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவிற்கு புதிய விசாவில் பொறியியலாளர்களாக பணிபுரிய வருகை தரும் வெளிநாட்டு பொறியியலாளர்களுக்கு கட்டாய தொழில்முறை சோதனை செய்யப்படவுள்ளதாக சவுதி அரேபிய கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சவுதி பொறியாளர்கள் கவுன்சில் (Training Evaluation Commission and the Saudi Council of Engineers (SCE) ஆகியவைகள் தெரிவித்துள்ளன.  

சவுதியில் பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக சவுதி அல்லாத தொழிலாளர்களுக்கு தொழில்முறை சோதனைகளை நடத்துமாறு சவுதி நகராட்சி மற்றும் ஊரக விவகார அமைச்சர் மஜீத் அல்-ஹொகெய்ல் அவர்களின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்குல் பணிபுரியும் வெளிநாட்டு பொறியாளர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் நடைமுறை அனுபவங்களை மதிப்பீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் மஜீத் அல்-ஹொகெய்ல்  வலியுறுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவில் அண்மையில் 2799 பேர் போலி பட்டம் சமர்ப்பித்து பொறியியலாளர்களாக பணிபுரிந்து வந்தமையினை சவுதி பொறியாளர்கள் கவுன்சில் (Saudi Council of Engineers (SCE) கண்டுபிடித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

கூடுதல் தகவல் - https://saudigazette.com.sa




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe