பிரேசிலில் உள்ள உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை 3 டி லேசர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. உலக அதிசயமான ரெடீமர் சிலை 3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்டது. ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் என்று அழைக்கப்படும் சிலையின் 90 வது ஆண்டு மறுசீரமைப்பை முன்னிட்டு அதன் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்காக ஜியோஸ்பேடியல் மேப்பிங் முறையில் சிலை முழுவதும் 3டி முறையில் லேசர் உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது இந்த உலகம் இதுவரை பார்த்திராத ரெடீமர் சிலையின் உள்புறக் காட்சிகள் வெளியாகின.