தகவல் - பாலசுப்ரமணியன்.
இன்று எல்லோருக்கும் கார் வாங்கும் மனநிலை வந்து விட்டது. கார்கள் சமூகத்தின் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால் பலர் எவ்வளவு கஷ்டபட்டாவது ஒரு காரை வாங்க வேண்டும் என்று நினைத்து வருகின்றனர். சிலரது வாழ்க்கையின் குறிக்கோளே ஒரு கார் வாங்குவதாகதான் இருக்கிறது.
இப்படியாக சமூக அஸ்தந்திற்கு தகுதியாக கார் பார்க்கப்படுவதால் இன்று பலர் தங்கள் வருமானத்தை மிஞ்சிய அளவில் கார்களை லோன்கள் மூலம் வாங்கி அதை அடைக்க முடியாமல் திணறி அந்த காருக்காக மற்ற அவசியமான செலவுகளை கூட தவிர்த்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
இப்படியாக சமூக அஸ்தந்திற்கு தகுதியாக கார் பார்க்கப்படுவதால் இன்று பலர் தங்கள் வருமானத்தை மிஞ்சிய அளவில் கார்களை லோன்கள் மூலம் வாங்கி அதை அடைக்க முடியாமல் திணறி அந்த காருக்காக மற்ற அவசியமான செலவுகளை கூட தவிர்த்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
அதை நீங்கள் பயன்படுத்தினாலும் அதற்கான ஒரு பராமரிப்பு செலவும் உங்களுக்கு ஆகும், அதே போல அதை பயன்படுத்தவே இல்லை என்றாலும் அதற்கான பராமரிப்பு செலவு என்று ஒரு தொகை ஆகும். ஆக கார், பைக் போன்ற வாகனங்கள் நமது தேவை, நமது வருமானம் எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு வாங்க வேண்டும்.
பலருக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினால் கார் வாங்கலாம், எவ்வளவு சம்பளத்திற்கு எவ்வளவு தொகையில் கார் வாங்கலாம் என பல கேள்விகள் உள்ளது.
ஒருவர் எந்த காரை வாங்கலாம் என்பது அவர் சம்பளத்தை மட்டும் அல்ல அவருக்கு இருக்கும் செலவுகளையும் கணக்கில் கொண்டே இருக்கிறது. குடும்பத்தினருக்கு பணம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இல்லாத ஒருவர் கார் வாங்கினால் அதே சம்பளம் வாங்கும் ஒரு குடும்பஸ்தரால் அந்த காரை வாங்க முடியாது.
அதே நேரத்தில் பலர் தங்கள் வருமானத்தை மிஞ்சிய காரை வாங்கி அதை பாரமரிக்க முடியாமல் கடைசியில் நஷ்டமாகி விடுவார்கள். குறிப்பாக ஒருவர் மாதம் 30 ஆயிரம் வருமானம் உள்ள ஒருவருக்கு ஆல்டோ அல்லது வேகன்-ஆர் கார்களை வாங்கினால் அவரது சம்பளத்தை வைத்து அந்த காருக்கான பராமரிப்பு செலவை சமாளிக்கலாம் என வைத்துக்கொள்வோம்.
ஆனால் அவர் ஸிப்ட் காரை அவர் வாங்கினால் அவரால் அதை சமாளிப்பது சிரமம், அதே நேரத்தில் அந்த கார் சிறிய விபத்தில் சிக்கினால் கூட அதற்கு ஆகும் செலவை சமாளிக்க அவர் மீண்டும் ஒரு கடன் வாங்க வேண்டியது வரும்.
ஆக உங்களுக்கு கார் வாங்க வேண்டிய தீராத வேட்கையிருக்குமானால் உங்களது வருமானம், செலவுகள் போன்றவற்றினைக் கருத்திற் கொண்டு உங்களுக்கான காரை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளுங்கள்.