சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் கடந்த 2020 ம் ஆண்டு 27 பேருக்கு மாத்திரமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இது கடந்த 2019 ம் ஆண்டை விட 85 வீதமாக குறைந்துள்ளதாகவும் சவுதி அரேபிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரண தண்டனைகள் மற்றும் பருவமடையாத சிறார்கள் செய்யும் குற்றங்களுக்கான மரணதண்டனைகள் இடை நிறுத்தப்பட்டு அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் திருத்தமும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
கூடுதல் விபரம் - https://saudigazette.com.sa