தகவல் - Dr A.I.A.Ziyad
சம்மாந்துறையில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சிலர் வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.
குறித்த வதந்தியினை உண்மையென நம்பி பல பெற்றோர்கள் பாடசாலைகளிலிருந்து தங்கள் பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடையம் சம்பந்தமாக சம்மாந்துறை MOH Dr Kabeer தெரிவிக்கையில், சம்மாந்துறையில் உள்ள எந்தப் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு எவ்வித PCR or Antigen பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் வதந்தியினை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் பீதியை போக்க ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.