சவுதி அரேபியாவில் கொரோன பரவலைத் தடுக்க சவுதி அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சுகாதார நடைமுறைகளுக் இணங்க சவுதி அரேபிய ரியாத் நகரில் உள்ள இந்திய துாதரகம் பொது இடங்களில் ஏற்படும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், இந்திய தூதரக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
அந்த அறிவித்தலில்,
உம்முல் ஹம்மாம், அல்-ஹதா மற்றும் அல்-கோபார் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகத்தின் கிளை பாஸ்போர்ட் அலுவலகம் வருபவர்கள் கண்டிப்பாக முன் அனுமதி(Appointment) பெற்றிருக்க வேண்டும் எனவுமு் இந்திய தூதரகம் சார்ந்த பல்வேறுபட்ட சேவைகள் சம்பந்தமாக அலுவலகம் செல்பவர்கள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய தூதரகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்தவர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கு நேரடியாக இந்த அலுவலகங்களுக்கு வரலாம் அல்லது கொரியர் மூலமோ பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.