Ads Area

சஹ்ரானின் போதனைகளில் 15 பெண்கள் கலந்து கொண்டதாக அம்பலம்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் நடத்திய தாக்குதல் குறித்த போதனை நடவடிக்கையில் தான் உட்பட மொத்தம் 15 பெண்கள் கலந்து கொண்டதாக கைதான பெண் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் ஐந்து பேர் 2019 ஏப்ரல் 26 சாய்ந்தமருது தாக்குதலில் உயிரிழந்துள்ளனர், மூன்று பேர் விளக்கமறியலில் உள்ளதுடன், தான் உட்பட 7 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சஹ்ரானின் தீவிரவாத் குறித்த போதனைகளில் கலந்து கொண்ட குற்றச்சாட்டுக்காக மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் சைதா என்ற யுவதியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு வெள்ளிக்கிழமை கைது செய்தது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சஹ்ரான் ஹாஸிமினால் முன்னெடுக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளில் 15 பெண்கள் பங்கேற்றிருந்தாக குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மாவனெல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு இளைஞர்களினதும் சகோதாரி என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Madawala News.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe