தகவல் - சம்மாந்துறை அன்சார்.
எதிர் வரும் புனித ரமழான் மாத நோன்பினை முன்னிட்டு சவுதி அரேபிய மன்னர் சல்மான் அவர்கள் நான்கு டன் பேரீச்சம் பழங்களை இந்தியாவுக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.
புனித ரமழானை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் 24 நாடுகளுக்கு டன் கணக்கில் பேரீச்சம் பழங்களை அன்பளிப்புச் செய்து வருகிறது. அதனடிப்படையில் அண்மையில் டெல்லியில் உள்ள சவுதி துாதரகம் ஊடாக இந்தியாவுக்கு 4 டன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சவுதி அரேபிய அரசாங்கம் 16 நாடுகளில் நோன்பு திறத்தலுக்கான இப்தார் ஏற்பாடுகளையும் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.