Ads Area

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரிற்கு 10,000 ரூபா தண்டம்; 6 மாதம் சிறை!

நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன் சுகாதாரவழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களுள் அதிகமானவர்கள் ​மொனராகல, திருகோணமலை மற்றும் களுத்துறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 3,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் அவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 10,000 ரூபா தண்டப்பணம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe