அனைத்து பயணிகள் விமான சேவையின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவானது இன்று நள்ளிரிவுடன் காலாவதியாகவுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி நள்ளிரவு முதல் இன்று ( மே 31) நள்ளிரவு வரை நாட்டிற்கான அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை ரத்து செய்திருந்தது.
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சரக்கு விமான சேவைகள் குறித்த காலக் கட்டத்தில் இயங்கின.
இந் நிலையிலேயே அந்த தடை உத்தரவானது இன்று நள்ளிரவு முதல் காலாவதியாகவுள்ளதுடன், அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) மீண்டும் திறக்கப்படும் என்று விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ. சானக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஒரு விமானத்தில் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Thanks - Virakesay News.