சம்மாந்துறை அன்சார்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினால் அவதியுறும் இந்தியாவுக்கு உதவும் முகமாக சவுதி அரேபியா மீண்டும் 60 டன் ஆக்ஸிஜன்களை சென்ற சனிக்கிழமை (2021-05-29) அனுப்பி வைத்துள்ளது.
இந்திய எண்ணெய்வள அமைச்சர் தர்மந்திர பிரதான் (Oil Minister Darmandra Pradhan) தனது டுவிட்டரில் 60 டன் திரவ ஆக்ஸிஜன் கொண்ட 3 கொள்கலன்களை சவுதி அரேபியா அனுப்பி வைத்தமைக்காக நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். ஆக்ஸிஜன்கள் எதிர்வரும் 2021 ஜூன் 6 ஆம் தேதி மும்பைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா இந்தியாவுக்கு மொத்தமாக 100 கன்டெய்னர் ஆக்ஸிஜனை வழங்க முன்வந்துள்ளது, இந்த ஆக்ஸிஜன்கள் படிப்படியாக எதிர்வரும் மாதங்களில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, சவுதி அரேபியா 80 டன் ஆக்ஸிஜன்களை, இந்திய "அதானி" "லிண்ட்" நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தமையும் குறிப்பிடத் தக்கதாகும்.