Ads Area

கிழக்கில் 3வது அலையில் இதுவரை திருகோணமலை 628, அம்பாறை 402, மட்டக்களப்பு 142, கல்முனை 21 கொரோனா தொற்று.

 ( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை (3)  1193 பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த இரு அலைகளின்போதிருந்த மாவட்ட தொற்றுநிலை தலைகீழாக மாறி திருகோணமலை அதிகூடிய தொற்றையும் அதிகுறைந்த தொற்றை கல்முனைப்பிராந்தியமும் கொண்டுள்ளது.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23 பேரும் இரண்டாவது அலையில் 3645 பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 628 பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் 402 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142 பேரும்     கல்முனைப் பிராந்தியத்தில்  21 பேரும்  தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

கிழக்கில் 3வது அலையில் இதுவரை 09பேர் மரணித்துள்ளனர். திருமலை மாவட்டத்தில் உப்புவெளியில் மூவரும் திருமலையில்  மூவரும் மூதூரில் இருவரும்   அம்பாறையில் உகனயில் ஒருவருமாக மொத்தம் 09பேர் மரணித்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 95 பேருக்கு தொற்று எற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 42 பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 26 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேரும்     கல்முனை பிராந்தியத்தில்   ஒருவருமாக  தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

கிழக்கிலுள்ள 08 சிகிச்சைநிலையங்களில் தற்போது 736பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் எனப்து குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe