Ads Area

குவைத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது!

குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவர், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரால் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று (09) காலை 8.30 மணி அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் குறித்த இலங்கை பணிப்பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று (09) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இன்று (10) நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குறித்த பெண் குவைட் இராச்சியத்திற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe