Ads Area

கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் யார் கையில் : கல்முனையில் ஆலோசனை கூட்டம்.

நூருள் ஹுதா உமர். 

நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறையினருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உள்ள கடமைப்பாடுகள், 

அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலும் கொரோணா கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றும் கலந்துரையாடலும் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கிப் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ. ஏ. ஆஷிக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, பாதுகாப்பு படை உயரதிகாரி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அமீன் றிசாத், கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை பிரதேச செயலக அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டு பிராந்திய கொரோனா நிலைகள் தொடர்பிலும், அதிகார பரவலாக்கம், அரசினால் முன்வைக்கப்படும் சுகாதார பொறிமுறைகள், தொற்று நோயியியல் சட்டதிட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினர். 

மேலும் இறைச்சி கடைக்காரர்கள், நடமாடும் வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளுக்கு ஒழுங்கான பொறிமுறைகளுடன் கூடிய திட்டங்களை உருவாக்குதல், வியாபார அனுமதி வழங்குதல் தொடர்பில் உள்ள முரண்பாடுகள், சாதக பாதக நிலைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe