கொவிட் 19 பரவல் காரணமாக அரசாங்கம் அமுல் படுத்தியிருக்கும் " பயணத்தடை காலப்பகுதியில், பொதுமக்களுக்கு அத்தியவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு வர்த்தக சங்கத்தினால் சிபார்சு செய்யப்படும் வியாபாரிகளுக்கு பிரதேச செயலகத்தினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது.
அனுமதிக்கப்படும் வியாபாரிகள் தங்களது வாகனத்தில் பொருட்களின் விலைப்பட்டியலினை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்.
காட்சிப்படுத்தாத , மற்றும் உரிய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வியாபாரியின் விபரங்களை உடனடியாக தங்களது பிரிவு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது கிராம சேவையாளர் அல்லது பிரதேச சபையின் 067 226 0043 , 077 230 9246 ஆகிய இலக்கத்திற்கு வாகன இலக்கத்துடன் அறியத்தரவும்.
மேலும் பயணத்தடை அமுலில் இருக்கும் இக் காலப்பகுதியில், ஒவ்வொரு நாளும் விஸேடமாக அமைக்கப்பட்ட " விலை நிர்ணயக் குழு " மூலம் பிரதேச சபையின் Face Book மற்றும் வர்த்தகச் சங்க ஊடகம், COVID - 19 STR - ( Whats App ) போன்ற செயலிகள் மூலம் அத்தியவசிய மரக்கறி / பலசரக்குப் பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்படும்.
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் வர்த்தகரிடமிருந்து பிரதேச சபையினால் எதுவித சந்தைக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது. என்பதையும் வர்த்தகர்களுக்கு அறியத்தருகின்றோம் .
இப்படிக்கு
சம்மாந்துறை பிரதேச சபை
சம்மாந்துறை
2021.06.01.