Ads Area

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாவித்த மாஸ்க் மற்றும் கையுறைகளை சாலைகளில் வீசினால் 1000 திர்ஹம் அபராதம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

கொரோனா தடுப்புக்காக பாவித்த முக கவசம், கையுறை உள்ளிட்டவைகளை வீதிகளில் வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும், இவ்வாறு முகக் கவசங்களை வீதியில் வீசுவோருக்கு 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அமீரக காவல் துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் காவல்துறை தெரிவிக்கையில்,

ஒருவர் வாகனத்திலிருந்தவாறே பாவித்த மாஸ்க் மற்றும் கையுறைகளை வீதியில் வீசி எறிந்தால் அவருக்கு 1,000 திர்ஹம் அபராதமும் மற்றும் ஆறு போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு குப்பைகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் போடுவது சுற்றுச்சூழலிற்கு கேடு விளைவிப்பதனால் அவற்றை உரிய முறையில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும் காவலத்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe