சவுதி அரேபியாவில் எதிர் வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி போடாதவர்கள் மால்கள் (Malls) , உணவகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆவணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சகம் தெளி வுபடுத்தியுள்ளது.
நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.