சம்மாந்துறை அன்சார்.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி நிலையம் ஒன்று நேற்று நாரஹன்பிடாவில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்போருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 1200 பேருக்கு ஃபைசர் (Pfizer) கோவிட் தடுப்பூசி வழங்குவதற்காக நாரஹன்பிடாவில் அமைந்துள்ள ராணுவ மருத்துவமனையில் இத்தடுப்பூசி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணப் பகுதிகளிலிருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு இந்த தடுப்பூசி ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வா தெரிவித்தார்.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் காத்திருக்கும் 8000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
வெளிநாடு செல்லக் காத்திருப்போருக்கு ஃபைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, ஏனெனில் பல நாடுகள் ஃபைசர் (Pfizer) தடுப்பூசி போன்ற குறிப்பிட்ட தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதித்துள்ளன.
வெளிநாடுகளுக்குச் செல்லக் காத்திருப்போர் இவ் லிங்கை https://services.slbfe.lk கிளிக் செய்து உங்களைப் பதிவு செய்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk