தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபிய ரியாத் நகரில் உள்ள பொது இடம் ஒன்றில் இரவு நேரங்களில் அங்கு வரும் பொதுமக்களை பயமுறுத்தும் படியான முகமூடிகள் அணிந்து பிரேங் செய்த நால்வரை சவுதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சவுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் பொது இடம் ஒன்றில் பயமுறுத்தும் முகமூடியணிந்து பொதுமக்களை இரவு நேரங்களில் பயமுறுத்தி பிரேங் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். தற்போது அவர்கள் பதிவேற்றிய வீடியோவின் அடிப்படையில் நால்வரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.