குவைத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடிய வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான சட்ட முன் வரைவு குவைத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் Dr. Abdullah Al-Turaiji அவர்களினால் Article No. 51 இற்கு இணங்க வீட்டு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட சட்ட முன்வரவு 68/2015 ஐ குவைத் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தான் பணிபுரியும் முதலாளியின் வீட்டை விட்டு தப்பி ஓடிய வீட்டுப் பணியாளர் தனது சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான கட்டணத்தை தானே செலுத்த வேண்டும் என்று அந்த சட்ட முன் வரைவு அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் தப்பி ஓடிய தொழிலாளி அல்லது அந்த தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்தவர், தனது வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார் என காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் 2 தினார் கொடுக்க வேண்டும் என்று அந்த சட்ட முன் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சட்ட முன் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள்,
01. வீட்டை விட்டு தப்பி ஓடிய வீட்டுத் தொழிலாளி நாடு கடத்தப்படும் போது உள்துறை அமைச்சகம் தொழிலாளியின் சொந்த செலவில் நாடு கடத்த வேண்டும் அல்லது டிக்கெட் பணத்தை தொழிலாளருக்கு அடைக்கலம் கொடுத்தவர் அல்லது வீட்டை விட்டு தப்பி ஓடிய இடைப்பட்ட காலத்தில் பணியில் அமர்த்தியவர்கள்,அந்த பணத்தை செலுத்த வேண்டும்.
முதலாளி மற்றும் வீட்டு வேலை செய்பவருக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் (Agreement Paper) இந்த பிரிவு அரபு மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
02. விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
குவைத்தில் வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டின் வீட்டு எண் தொழிலாளர் சட்ட எண் 68 வழங்கப்பட்டது. அந்த சட்டம் தற்போது தோல்வியடைந்துள்ளதாகவும், மேலும் 'தப்பி ஓடியவர்கள்' எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்களை பொறுப்பாளராகவும், பணியாளராக அவர்களை பாதுகாக்கும் நபர்களையும் பொறுப்பேற்க இந்த திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.