Ads Area

சவுதி அரேபியாவில் வண்டியை பார்க்கிங் செய்ய அல்லது நிறுத்தி வைக்க தடை செய்யப்பட்டுள்ள சில முக்கிய இடங்கள்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவில் சில முக்கிய இடங்களில் வாகனங்களை பார்க்கிங் (Parking) செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ (Stop) முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

அவ்வாறான 9 முக்கிய இடங்கள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

01. பாலங்கள் (Bridges)

உயரமான பாலங்களுக்கு மேலால் பயணம் செய்யும் போது அந்தப் பாலங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ அனுமதியில்லை.

02. நடு வீதியில் (middle of the road)

வீதியின் நடுவில் வாகனத்தை நிறுத்தி வைப்பதும், பார்க்கிங் செய்வதும் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. சிலர் வீதியில் நடுவில் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள் இது முற்றிலும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

03. பாதசாரிகள் செல்லும் வழி (Pedestrian corridors or paths)

பாதசாரிகள் செல்லும் வழிகளில் வாகனத்தை பார்க்கிங் செய்யக் கூடாது.

04. ட்ராபிக் சிக்னல்களில் (Traffic Signal)

ட்ராபிக் சிக்னல்களிலும் வாகனத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. போக்குவரத்து ட்ராபிக் சிக்னலிலிருந்து 15 மீட்டர் துாரத்தில் அல்லது அதற்கு குறைவான அளவில் வாகனத்தை நிறுத்தி வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

05. நடந்து செல்வதற்கான ஓதுக்கப்பட்டுள்ள இடங்கள் (At sidewalks)

06. சில விசேட வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் (certain category of vehicles)

சாலைகளில் சில இடங்கள் முக்கியமான சில வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அவ்வாறான வாகனங்களில் பார்க்கிங் செய்வதும் குற்றமாகும்.

07. வளைவுகளில் (turnings)

இடது, வலது எனத் திரும்பும் வளைவுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது.

08. பாடசாலை நடைபாதைகள் (school corridors)

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் நடை பாதைகளில் வாகனத்தை தரித்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.

09. வீதியின் எதிர்த்திசையில் நிறுத்தி வைப்பது (Parking in opposite direction of traffic flow)

10. அங்கவீனமுற்றோரின் இடங்கள்.

வலது தேவையுடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்வதும் குற்றமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe