சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 360,000 லீட்டர் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதனால் ஆக்ஸிஜனின் தேவை காரணமாக நாட்டிற்குள் போதுமான அளவு ஆக்ஸிஜனை முன்கூட்டி சேமித்து வைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனின் இருப்பு எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் விஜேவிக்ரம மேலும் தெரிவிக்கையில், அன்னளவாக ரூ. ஒரு நோயாளிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க 100,000 செலவிடப்படுகிறது, அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ஒரு நாளைக்கு 250,000 செலவாகும் மேலும் பீ.சி.ஆர் பரிசோதனைக்காக 4000 தொடக்கம் 5000 வரை செலவாகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk