தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் அரசாங்கம் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா காரணமாக மரணித்தால் அவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 5 இலட்சம் சவுதி ரியால்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவ ஊழியர்களான சவுதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் இதுவரை 8320 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர் இவர்களில் மருத்துவத் துறை ஊழியர்கள் எத்தனை பேர் என்ற விபரம் அறிவிக்கப்படவில்லை.