நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் ஆதார மருத்துவமனையில் கடமையாற்றும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடமை பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்ததுடன், மருத்துவமனை வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்தனர்.
நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஒண்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக இன்று (27) காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், மதியம் 12 முதல் 12.15 வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சுகாதார ஊழியர்களின் பல்வேறு விடயங்களை எழுதியிருந்த சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.