Ads Area

சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் 24 மாணவர்களுக்கு 9ஏ சித்தி, 34 மாணவர்களுக்கு 8ஏ சித்தி.

 சா.நடனசபேசன்

வெளியான க.பொ.த. சாதாரணதரப் பெறுபேறுகளின்படி  சம்மாந்துறைக் கல்வி வலயத்தில்  56 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கான தகுதி பெற்று இருப்பதாக வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பரீட்சைக்குத் தோற்றிய 1404 மாணவர்களில்  தமிழ், கணிதம் உட்பட 783 மாணவர்கள் சித்திபெற்று உயர்தரம் கற்பதற்கான தகுதியினை பெற்றுள்ளதுடன் வலயத்தில் 9ஏ. சித்தியினை 24 மாணவர்களும், 8ஏ சித்தியினை 34 மாணவர்களும் பெற்று இருப்பதுடன் 151 மாணவர்களது அழகியல் பாடத்தின் பெறுபேறு வெளியிடப்பட இருப்பதுடன் இவர்களது பெறுபேறு வெளியாகும் பட்சத்தில் வலயத்தின் சித்தி வீதம் மேலும் 4 வீதத்தால் அதிகரிக்கக் கூடும் எனவும் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.

அதேவேளை இவ்வருடப் பெறுபேறானது கடந்த வருடத்தினைக் காட்டிலும் அதிகரித்து இருப்பதுடன் இவ் அடைவுகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்  பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள்,உதவிக்கல்விப்பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe