Ads Area

தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்களும் ஓமான் பயணிக்கலாம்..!! ஆனால் தனிமைப்படுத்தல் கட்டாயம்..!!

ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில், செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா  வைத்திருந்து, கொரோனாவிற்கான தடுப்பூசி எடுக்காத அரசுப் பிரிவுகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தற்பொழுது ஓமானுக்கு திரும்பலாம் என்று அரசு தகவல் தொடர்பு மையம் (GC) தெரிவித்துள்ளது.

GC ஆல் ஆன்லைனில் வெளியிடப்பட்ட அறிக்கையில்: “செப்டம்பர் 1, 2021 முதல், நாட்டிற்கு வரும் பயணிகள் ஓமானால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் இரண்டு டோஸ்களைப் பெற்றிருக்க வேண்டும். ஃபைசர் பயோனிக், ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா, ஸ்புட்னிக் சினோவாக், மாடர்னா , சினோஃபார்மா, கோவிஷீல்டு அஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாகும். இது நாட்டிற்கு வர திட்டமிடப்பட்ட தேதிக்கு முன் தடுப்பூசியின் கடைசி டோஸைப் பெற்று குறைந்தது 14 நாட்களைக் கடந்திருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

எனினும் பின்வரும் பிரிவினர் ஓமான் திரும்ப அனுமதி வழங்கப்படுவதாக GC அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள்

1. நாட்டிற்கு வெளியே இருந்து வரும் மற்றும் தடுப்பூசி பெறாமல் இருக்கும் ஓமானி குடிமக்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்.

2. ஓமானில் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை மட்டுமே எடுத்துக்கொண்டு தங்கள் நாடுகளில் இரண்டாவது டோஸைப் பெற முடியாத செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து ஓமான் அரசுப் பிரிவுகள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள். 

3. செல்லுபடியாகும் குடியிருப்பு விசா வைத்திருந்து, கொரோனா தடுப்பூசி போடாத அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள். 

ஓமானிற்கு திரும்ப அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட பயணிகள், அரசு அறிவித்துள்ள பயண நடைமுறையில் உள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஓமான் வருவதற்கு முன் PCR சோதனை, மின்னணு கண்காணிப்பு சாதனம் அணிதல் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தல் (ஓமானியர்களுக்கு) மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் (ஓமானியர்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு) ஏழு நாட்கள் மற்றும் PCR மறு ஆய்வு ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எட்டாவது நாளில் ஒரு PCR சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks - https://www.khaleejtamil.com/



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe