(எம்.என்.எம்.அப்ராஸ் )
சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) அனுசரணையில் கல்முனை பிரதேச நல்லிணக்க இளைஞர்கள் மன்றம் அங்குராப்பண ஒன்று கூடல் நிகழ்வு அம்பாறை மாவட்ட மற்றும் கல்முனை பிரதேச நல்லிணக்க மன்றத்தின் இனைப்பாளர் எஸ்.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் (17) கல்முனையில் நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடலானது பிரதேச இளைஞர் மன்றத்தின் அறிமுகம் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் பற்றியும் இளைஞர்கள் மத்தியில் மேற்கொள்ளவேண்டிய நல்லிணக்கமுன்னெடுப்புக்கள் தொடர்பில் நல்லிணக்கமன்றத்தின் முக்கிஸ்தகர்களால் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் கருத்துரைக்கப்பட்டது.
மேலும் இதன் போது கல்முனை நல்லிணக்க இளைஞர் மன்ற இணைப்பாளராக எம். வை. எம். வை. இம்ரான்மற்றும் செயலாளராக எம். எஸ் ரக்சானா ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில சமாதானம் மற்றும் சமூக பணி அமைப்பின்(PCA) இணைப்பாளர் டி.இரஜந்திரன் , சமாதான சமுகபணி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எல்.ஏ.மாஜீத், இளைஞர்கள் ,யுவதிகள் ஆகியோர் என பலரும் கலந்து கொண்டனர்.