தகவல் - சம்மாந்துறை அன்சார்.
வெளிநாட்டைச் சேர்ந்த (UK) 31 வயது பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நடிகையான Charlotte Crosby என்பவர் தனது நண்பரும் InTheStyle தலைமை நிர்வாக அதிகாரியுமான Adam Frisby உடன் அண்மையில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். விமான நிலையத்தில் அவரது லக்கேஜ்களை அதிகாரிகள் சோதனையிட்ட போது வைப்ரேட்டர் - Vibrator வகை சுயஇன்ப கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்படும் நிலைக்குச் சென்று விட்டார்.
பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் அவர் விமான நிலைய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டிருந்தார். அமீரக சுங்கத்துறை விதிமுறைகளின்படி இந்தக் கருவிகள் தடை செய்யப்பட்டவையாகும். பாலியல் சாதனங்களை அமீரகத்தில் பயன்படுத்துவதோ, அமீரகத்திற்குள் எடுத்து வருவதோ முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, 31 வயதான பெண் ஒருவர், துபாயில் வசித்தபோது, 1,000 க்கும் மேற்பட்ட செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்ததற்காகவும், ஒரு செக்ஸ் பொம்மைக் கடையை நடத்தியதற்காகவும் கைது செய்யபட்டிருந்தார். செக்ஸ் பொம்மையை வாங்கச் செல்வது போல் ரகசிய அதிகாரி நடத்திய சோதனையில் அந்தப் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 5000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் கடந்த ஆண்டு, துபாயில் 150க்கும் மேற்பட்ட செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்ததற்காக ஒரு நபர் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.